--- --:--:-- --

கர்ப்பிணி பெண்களுக்கு காலாவதியான பொருட்கள்.!

7

தர்மபுரி மாவட்டத்தில் கர்ப்பிணி பெண்களுக்கு வழங்கப்பட்ட ஊட்டச்சத்து பெட்டகங்களில் காலாவதியான பொருட்கள் இருந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டி பகுதியில் எடுத்த மூக்கா ரெட்டிபட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கடந்த ஐந்து நாட்களுக்கு முன்பு 150 கர்ப்பிணிகளுக்கு அரசு ஊட்டச்சத்து பெட்டகங்கள் வழங்கப்பட்டுள்ளது. அதில் ஊட்டச்சத்து பவுடர் இரும்புச்சத்து டானிக் 500 மில்லி, பேரிச்சம்பழம் ஆகியவை இருந்துள்ளது.

 

இதில் பேரீச்சம் பழம் காலாவதியாக இருந்துள்ளது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த மணி பாரதி என்பவர் மருத்துவமனைக்கு சென்று கேட்டுள்ளார். ஆனால் செவிலியர் ஒருவர் இதனை பெரிது படுத்த வேண்டாம் எனக் கூறியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

மேலும் இது தொடர்பாக தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon