பஸ் ஸ்டாண்டில் தண்ணீர் குடித்த கூலித்தொழிலாளி திடீர் உயிரிழப்பு..!
நன்னிலம் பேருந்து நிலையத்தில் தண்ணீர் குடித்துக் கொண்டிருந்த கூலி தொழிலாளி மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. திருவாரூர் மாவட்டம் நன்னிலம் பகுதியைச் சேர்ந்தவர் ஆனந்தன்.
கூலித்தொழிலாளியாக இவருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். நன்னிலம் பேருந்து நிலையத்தில் தண்ணீர் குடித்துக் கொண்டிருந்த ஆனந்தன் திடீரென மயங்கி விழுந்துள்ளார்.
அருகில் இருந்தவர்கள் ஓடி சென்று பார்த்த பொழுது அவர் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தது தெரியவந்துள்ளது. தகவல் அறிந்து வந்த போலீசார் ஆனந்தனின் உடலை கைப்பற்றும் மருத்துவ பரிசோதனைக்கு பிறகு உடலை குடும்பத்தாரிடம் ஒப்படைத்து விசாரணை நடத்தினர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





