விடாமுயற்சி திரைப்படம் காண வந்த ரசிகர்களுக்கு அதிர்ச்சி..!
சென்னையில் விடாமுயற்சி திரையிடப்பட்டுள்ள திரையரங்கிற்கு வெளியே போக்குவரத்துக்கு இடையூறாக வாகனங்களை நிறுத்தி ரசிகர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
குரோம்பேட்டையில் உள்ள பிரபல திரையரங்கிற்கு விடாமுயற்சி திரைப்படத்தை காண வந்த ரசிகர்கள் போக்குவரத்திற்கு இடையூறாக சாலை ஓரத்தில் வாகனங்களை நிறுத்தியுள்ளனர்.
இதனையடுத்து போக்குவரத்து காவல்துறையினர் அந்த வாகனங்களுக்கு 500 ரூபாய் முதல் 1000 ரூபாய் வரை அபராதம் விதித்தனர்.





