திருப்பூரில் வருவாய் ஆய்வாளர் 25 பேர் பணியிட மாறுதல்..!
ஊத்துக்குளி, பல்லடம், தாராபுரம், காங்கயம், உடுமலை உள்ளிட்ட தாலுகாக்களில் பணிபுரியும் முதுநிலை வருவாய் ஆய்வாளர்கள் பணியிட மாறுதல் செய்யப்பட்டுள்ளனர்.
நிர்வாக நலன் கருதி மேற்கொள்ளப்பட்டுள்ள மாறுதல்கள் மற்றும் நியமனங்கள் தொடர்பாக எவ்வித கோரிக்கைகள், மேல் முறையீடுகள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது என டி.ஆர்.ஓ. கார்த்திகேயன் உத்தரவிட்டுள்ளார்.





