சிறுவனுடைய காயத்தில் பெவிகுயிக்.. அரசு செவிலியர் பணியிட மாற்றம்..!
கர்நாடகாவில் காயமடைந்த சிறுவனுக்கு பெவிகுயிக் தடவிய செவிலியர் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
கர்நாடகா மாநிலம் காவேரி அருகே ஆரம்ப சுகாதார மையத்தில் கன்னத்தில் காயமடைந்த சிறுவனுக்கு தையல் போடாமல் பணியில் இருந்து செவிலியர் தையல் போட்டால் கன்னத்தில் தழும்பு ஏற்படும் என்பதால் பெவிகுயிக் தடவியதாக செவிலியர் கூறிய நிலையில் இந்த சம்பவத்தின் வீடியோ இணையத்தில் பரவியது. இதையடுத்து செவிலியரை பணியிடம் மாற்றம் செய்து சுகாதார அதிகாரி உத்தரவிட்டார்.





