கருணை கொலைக்கு அரசு அனுமதி..!
தீராத நோயால் கஷ்டப்படும் நோயாளிகளை கருணை கொலை செய்ய கர்நாடக அரசு அனுமதி வெளியிட்டுள்ளது. குணப்படுத்தவே முடியாத தீராத நோயால் பாதிக்கப்பட்ட வாழ்நாள் முழுவதும் கஷ்டப்படும் நோயாளிகள் கண்ணியமாக இருப்பதற்கான உரிமை இருப்பதாக உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
கண்ணியமான மரணத்திற்கான உரிமை தொடரமான விஷயத்தை வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்கும்படி மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டிருந்தது. இந்த நிலையில் உச்சநீதிமன்ற உத்தரவை அடிப்படையாகக் கொண்டு கருணைக் கொலைக்கு கர்நாடகா அரசு அனுமதி அளித்துள்ளது.
தீராத நோயால் கஷ்டப்படும் நோயாளிகளை கருணை கொலை செய்யும்படி குடும்பத்தினர் கேட்டுக்கொண்டார். கருணைக்கொலை தொடர்பான அறிக்கை அளிக்க இரண்டு மருத்துவக் குழுக்கள் அமைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.
இந்த குழுக்களின் அடிப்படையில் தொடர்ந்து உச்ச நீதிமன்றத்தில் அனுமதி கோரி நோயாளி கருணை கொலை செய்யப்படுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கருணை கொலைக்கான அனுமதி, வரலாற்று சிறப்புமிக்க உத்தரவு என்ன கர்நாடகா சுகாதாரத் துறை அமைச்சர் கருத்து தெரிவித்துள்ளார்.





