ராகுல் டிக்கி மரணம்..சக யூடியூபர்கள் கண்ணீர் அஞ்சலி..!
இருசக்கர வாகனத்தை மெதுவாக இயக்க வேண்டும் என்று சாலை விபத்தில் உயிரிழந்த இன்ஸ்டாகிராம் ராகுலின் குடும்பத்தினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர். பாளையம் பகுதியைச் சேர்ந்த ராகுல் இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூபில் தனது ரீல்ஸ் வீடியோக்கள் மூலமாக பிரபலம் அடைந்தவர்.
இவர் இருசக்கர வாகனத்தில் தனது மாமியார் வீட்டிற்கு செல்லும் பொழுது கவுந்தப்பாடி அருகே சாலையின் தடுப்பின் மீது மோது விபத்தில் சிக்கினர். இதில் படுகாயம் அடைந்த ராகுல் நிகழ்விடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். தொடர்ந்து கூராய்வுக்கு பின் அவரின் உடல் ஒப்படைக்கப்பட்டது.
ராகுலின் உடல் சொந்த ஊரான கருங்கல்பாளையம் பகுதியில் அல் அமீன் தர்காவில் உள்ள மயானத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது. அவரது இறுதி ஊர்வலத்தில் அவரை சமூக வலைதளங்களில் பின்தொடர்பவர்களும் சக யூடியூபர்களும் கலந்து கொண்டு கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.





