மக்களை நம்பினால் வெற்றி: சசிகலா
ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலை அதிமுக, பாஜக புறக்கணித்துள்ளன. இந்நிலையில், இடைத்தேர்தலை புறக்கணிப்பது தவறானது என சசிகலா கருத்து தெரிவித்துள்ளார்.
மக்கள் மீது நம்பிக்கை வைத்து போட்டியிட்டால் நிச்சயம் வெற்றி கிடைக்கும் எனவும் அவர் கூறியுள்ளார். மேலும், திமுக அரசு வீண் செலவு செய்து கொண்டிருப்பதாகவும், அவர்கள் செய்ததை மக்களுக்கு புரியும் வகையில் வெள்ளை அறிக்கையாக வெளியிடவும் வலியுறுத்தியுள்ளார்.





