காசாவில் பலி எண்ணிக்கை 46,645ஆக அதிகரிப்பு
இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதலில் காசாவில் பலியானோர் எண்ணிக்கை 46,645ஆக அதிகரித்துள்ளது. ஹமாஸ் அமைப்பினர் நடத்திய திடீர் தாக்குதலுக்கு பதிலடியாக, காசாவுக்குள் புகுந்து இஸ்ரேல் 15 மாதங்களாக தாக்குதல் நடத்தி வருகிறது.
இதனால் அங்கு பேரழிவு ஏற்பட்டுள்ளது. பல லட்சம் பேர் வசிப்பிடங்களை காலி செய்துவிட்டு வெளியேறி விட்டனர். பல ஆயிரம் பேர் இஸ்ரேல் தாக்குதலில் காயமடைந்து சிகிச்சையில் உள்ளனர்.






