--- --:--:-- --

நோயாளியிடம் லஞ்சம் வாங்கும் செவிலியர்..!

3

திண்டுக்கல்லில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நோயாளிக்கு கட்டு போட லஞ்சம் வாங்கிய ஊழியர் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். மருத்துவமனைக்கு வந்த நோயாளி ஒருவரின் காலில் மருந்து வைத்து கட்டுப்போட செவிலியர் ஒருவர் பணம் கேட்பது போன்ற காட்சி சமூக வலைதளங்களில் பரவியது.

 

அந்த மருத்துவமனையில் நோயாளிகளிடம் பணியாளர்கள் பணம் கேட்பதாகவும் 50 ரூபாய்க்கு குறைவாக கொடுத்தால் வாங்க மறுப்பதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தது.

 

இது தொடர்பாக மருத்துவமனை நிர்வாகத்திடம் விளக்கம் கேட்ட பொழுது நோயாளியிடம் 200 ரூபாய் லஞ்சம் வாங்கிய பணியாளர் 10 நாட்கள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும் அவரிடம் விசாரணை நடத்தப்படும் எனவும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon