--- --:--:-- --

டிக் டாக் மோகத்தில் சிக்கி வினிதா மாயம்!

3

டிக் டாக் மோகத்தில் சிக்கி தேவகோட்டை வினிதா தனியார் பெண் தங்கும் விடுதியில் இருந்து மாயமானார். வினிதாவிடம் தேவகோட்டை காவல் நிலையத்தில் தொடர்ந்து இரு தினங்களாக போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இதில் திருவாரூரில் வசிக்கும் தனது டிக்டாக் தோழி அபிக்கு தனது கரூர் தோழி சரண்யா மூலம் 20 சவரன் நகையை கொடுத்ததாக கூறப்படுகிறது.

 

இதைத்தொடர்ந்து தேவகோட்டை போலீசார் அபி மற்றும் கரூர் பெண் சரண்யா ஆகியோர் தொலைபேசியில் தொடர்பு கொண்டு விசாரணைக்காக தேவகோட்டைக்கு வரும்படி உத்தரவிட்டனர். ஆனால் இருவரும் வராததால் அவர்களை கைது செய்து விசாரிக்க தனிப்படை போலீசார் திருவாரூர் மற்றும் கரூருக்கு விரைந்தனர்.

 

இந்த நிலையில் போலீசாரிடம் இருந்த வினிதா தனது தாய் மற்றும் கணவருடன் செல்ல மறுத்ததால் அவரை காரைக்குடியில் உள்ள தனியார் மகளிர் விடுதியில் தங்க வைத்தனர். ஆனால் அங்கிருந்து தனியார் தங்கும் விடுதி சார்பில் வடக்கு காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து வினிதாவை போலீசார் தேடி வருகின்றனர்.

Leave a Reply

Right Menu Icon