கொள்ளை அடிக்க முயன்ற நபர்கள்..ஏரியில் பதுங்கியதை காட்டி கொடுத்த ட்ரோன்..!
மதுராந்தகம் அருகே ஏரியில் பதுங்கி இருந்த கொள்ளையர்கள் ட்ரான் கேமராவால் சிக்கினர். மதுராந்தகம் அருகே உள்ள மேடவாக்கம் பகுதியைச் சேர்ந்த பார்த்தசாரதி தனது மகனிடம் கூறிவிட்டு சென்னையில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றார்.
இந்நிலையில் பார்த்தசாரதியின் மகன் வீட்டிற்கு வந்த பொழுது கதவு உடைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்ற பொழுது அதை எதிர்பாராத இருவர் அங்கேயே இருந்து தப்பி அருகே இருந்த ஏரிக்குள் பதுங்கினர்.
இதையடுத்து ட்ரோன் கேமராவை பறக்கவிட்டு ஆய்வு செய்துவிட்டு கொள்ளையர்கள் இருவரும் ஏரிக்குள் பதுங்கி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இளைஞர்கள் ஏரிக்குள் இறங்கி கொள்ளையர்களை சுற்றி வளைத்து காவல்துறையிடம் ஒப்படைத்தனர்.
விசாரணையில் பிடிப்பட்ட இருவர் சென்னை மேடவாக்கத்தை சேர்ந்த சஞ்சய் ஜமீன் பல்லாவரத்தை சேர்ந்த ஜான்சன் என்பது தெரிய வந்தது. இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





