நாகப்பட்டினத்தில் அறுவடைக்கு காத்திருந்த பயிர்கள் சேதம்..
நாகப்பட்டினத்தில் அறுவடைக்கு தயாராக இருந்த நிலையில் வயலில் சாய்ந்த நெற்பயிர்களை மாவட்ட காவல் கண்காணிப்பு அலுவலர் கள ஆய்வு மேற்கொண்டனர். நாகப்பட்டினம் மாவட்டத்தில் ஒரு லட்சத்து ஐம்பதாயிரம் ஏக்கர் பரப்பளவில் இந்த ஆண்டு சம்பா சாகுபடி மேற்கொள்ளப்பட்டுள்ளது.
தற்பொழுது பெய்த வடகிழக்கு பருவமழையால் சுமார் 40,000 ஏக்கர் பரப்பளவில் பயிர்கள் முற்றிலுமாக தண்ணீரில் மூழ்கி அழகு தொடங்கியதால் விவசாயிகள் வேதனை அடைந்திருந்தனர். இந்த நிலையில் கடந்த வாரம் திடீரென பெய்த கன மழையால் நாகப்பட்டினம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் அறுவடைக்கு தயாராக இருந்த சம்பா பயிர்கள் முற்றிலுமாக விலை நிலத்தில் சாய்ந்தது.
இதனால் விவசாயிகள் உரிய நிவாரணம் வழங்க வேண்டி கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த நிலையில் நாகை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அண்ணாதுரை மழையால் சாய்ந்த பயிர்களை இன்று நேரில் ஆய்வு செய்தார். குறிப்பாக குத்தகரம், பட்டமங்கலம், செம்பியம் மகாதேவி உள்ளிட்ட பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டவர் விவசாயிகளுடன் நேரடியாக பாதிப்புகள் குறித்து கேட்டிருந்தார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





