--- --:--:-- --

சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு..பெண் காவல் ஆய்வாளர் அதிரடி கைது..!

7

சென்னையில் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் அதிமுக வட்ட செயலாளர் மற்றும் பெண் காவல் ஆய்வாளரை சிறப்பு புலனாய்வு குழு கைது செய்துள்ளது.

 

சென்னை அண்ணாநகரை சேர்ந்த 10 வயது சிறுமியின் பெற்றோர் தமது மகளை சதீஷ் என்ற இளைஞர் பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார் அளிக்க காவல் நிலையம் சென்றுள்ளனர். ஆனால் அங்கு புகாரை வாங்காமல் புகார் அளிக்க வந்தவர்களை காவல் ஆய்வாளர் தாக்கியதாக பெற்றோர் குற்றம் சாட்டிய வீடியோ வலைதளங்களில் வெளியானது.

 

பின்னர் இது தொடர்பான வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் வழக்கை சிபிஐக்கு மாற்றி உத்தரவிட்டது. இதனை எதிர்த்து தமிழ்நாடு அரசு மேல்முறையீடு விசாரித்த உச்ச நீதிமன்றம் சிபிஐ விசாரணையை இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டது. அதோடு டிஏஜி தலைமையில் ஆன சிறப்பு புலனாய்வு குழுவை அமைத்து உத்தரவிடப்பட்டது.

 

இதையடுத்து இந்த வழக்கில் சதீஷ் என்ற இளைஞர் 16 வயதான சிறுவன் ஆகிய இருவரை கைது செய்தனர். இந்த நிலையில் புதிய திருப்பமாக சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் அதிமுகவைச் சேர்ந்த 103 வது வட்ட செயலாளர் சுதாகரும் அண்ணாநகர் காவல் நிலைய ஆய்வாளர் ஆகியோரையும் சிறப்பு புலனாய்வு குழு கைது செய்துள்ளது.

 

இருவருமே குற்றவாளி சதீஷ்க்கு ஆதரவாக செயல்பட்ட வழக்கில் இருந்து அவரது பெயரை நீக்க வற்புறுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டிருப்பதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon