அய்யன் திருவள்ளுவர் விழா 2024: அம்மாபாளையம் நகராட்சி பள்ளி மாணவ,மாணவிகளுக்கு பாராட்டு
தமிழ்நாடு அரசு பொது நூலகத்துறை திருப்பூர் மாவட்ட நூலக ஆணைக்குழு, திருப்பூர் மாவட்ட மைய நூலகம் வாசகர் வட்டம் மற்றும் திருப்பூர் மக்கள் மாமன்றம் சார்பில் கன்னியாகுமரியில் அய்யன் திருவள்ளுவர் சிலை நிறுவி 25 ஆண்டுகள் நிறைவை முன்னிட்டு நடந்த வெள்ளி விழாவையொட்டி அய்யன் திருவள்ளுவர் விழா 2024 திருப்பூரில் நடந்தது.
இந்த விழாவில் நடத்தப்பட்ட பல்வேறு போட்டிகளில் திருமுருகன்பூண்டி அம்மாபாளையம் நகராட்சி நடுநிலைப்பள்ளியில் இருந்து 12க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.
போட்டியின் முடிவில் பேச்சுப் போட்டியில் மாணவி லக்ஷ்னா முதலிடமும், ரொக்கப்பரிசு ரூ 3 ஆயிரமும், திருக்குறள் வினாடி வினா போட்டியில் மாணவர் தர்ணீஷ் மற்றும் மாணவி சுபஸ்ரீ ஆகியோர் முதலிடமும், ரொக்கப்பரிசு இருவருக்கும் சேர்த்து ரூ 2 ஆயிரத்து 500 ம், திருக்குறள் ஒப்புவித்தல் போட்டியில் மாணவி பிரிசில்லா முதலிடமும், ரொக்கப்பரிசு ரூ 1500 ம், அதே ஒப்புவித்தல் போட்டியில் மாணவி அனுஷா மூன்றாம் இடம்பெற்றதுடன் ரொக்க பரிசாக ரூ 500 ம் வழங்கப்பட்டது.
மேலும் போட்டியில் கலந்து கொண்ட மாணவிகள் அகல்யா, சிவஜோதி, இனியா, ஜனனிஸ்ரீ, கனிஷ்கா, ஹன்சிகா, தர்ஷிகா, ரசிகா ஆகியோருக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.இதனை தொடர்ந்து பள்ளியில் நடந்த பாராட்டு விழாவில் பள்ளி தலைமை ஆசிரியர் ராமகிருஷ்ணன் தலைமையில் தமிழாசிரியை செந்தாமரைசெல்வி முன்னிலையில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பாராட்டி வாழ்த்து தெரிவிக்கப்பட்டது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




