--- --:--:-- --

திருப்பூர் மாநகர 15 வது போலீஸ் கமிஷனராக பொறுப்பேற்ற சு.ராஜேந்திரன் பேட்டி..!

6

திருப்பூர் மாநகர போலீஸ் கமிஷனராக இருந்த லட்சுமி சென்னைக்கு மாற்றப்பட்டார். இதனையடுத்து திருப்பூர் மாநகர 15 வது போலீஸ் கமிஷனராக சு. ராஜேந்திரன் இன்று பொறுப்பேற்றார். தொடர்ந்து அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

 

அப்பொழுது அவர் கூறியதாவது :- இன்று திருப்பூர் மாநகர காவல் ஆணையராக பொறுப்பேற்றுள்ளேன். இந்த வாய்ப்பினை அளித்த தமிழ்நாடு அரசுக்கு எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.  திருப்பூர் மாநகரில் சட்டம் ஒழுங்கு பராமரிப்பு, குற்றங்களை தடுப்பது, நடந்த குற்றங்களை கண்டறிவது, போக்குவரத்து நெரிசல் மற்றும் சாலை விபத்துக்களை குறைப்பது ஆகிய நடவடிக்கைகளில் சிறப்பு கவனம் செலுத்தப்படும்.

 

டாஸ்மாக் கடைகள் மற்றும் பார்கள் குறித்து முன்னர் இருந்த அதே நிலை தொடரும். பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு பாலியல் தொடர்பான விழிப்புணர்வுகள் ஏற்படுத்த தனிக்குழு அமைக்கப்படும். பொருளாதாரம் தொடர்பான குற்றங்கள் கண்டறிவதிலும், குற்றவாளிகளை கைது செய்வதிலும் முக்கிய கவனம் செலுத்தப்படும்.

 

இங்கு சைபர் கிரைம் பிரிவு நன்றாக செயல்பட்டு வருகிறது. சைபர் கிரைம் குற்ற ஏரியாவாக வந்து கொண்டிருக்கிறது. இதற்காக பொதுமக்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படும். அதேபோல் நடந்த குற்றங்களை கண்டறிய சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு அதன் அடிப்படையில் நடவடிக்கைகள் எடுக்கப்படும். பொதுமக்கள் போக்குவரத்து விதிகளை மீறுவது குறித்த கேட்ட கேள்விக்கு போக்குவரத்து பராமரிப்பு குறித்து மூன்று கட்டமாக பிரித்துள்ளோம்.

 

முதல் கட்டமாக ரோடுகளில் பேரிகேடுகள் போடப்பட்டு வேகத்தை கட்டுப்படுத்தவும், சிக்னல்கள், சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்.  பின்னர் போக்குவரத்து விதிகள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும். பின்னர் இறுதி நடவடிக்கையாக அபராதம் போடப்படும். அப்போது விதிமீறல்கள் குறையும்.

 

பங்களாதேஷ் உள்பட வெளிநாடுகளில் இருந்து முறைகேடாக தங்கி இருப்பவர்கள் கண்டறியப்பட்டு தகுந்த தண்டனை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். பொதுமக்கள் எந்த நேரம் என்றாலும் என்னை அலுவலகத்தில் வந்து பார்க்கலாம். அவர்களது குறைகளை தீர்க்க தக்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வளவு அவர் கூறினார்

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon