--- --:--:-- --

அரசு சார்பில் 320 கர்ப்பிணி பெண்களுக்கு வளைகாப்பு விழா

3

சேலத்தில் 370 கர்ப்பிணிபெண்களுக்கு நடந்த வளைகாப்பு விழாவில் அமைச்சர் சரோஜா கலந்துகொண்டு சீர்வரிசை பொருட்களை வழங்கினார். சீலநாயக்கன்பட்டி யில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் சமூகநலத்துறை சார்பில் ஏழை குடும்பங்களைச் சேர்ந்த 370 பெண்களுக்கு வளைகாப்பு விழா நடத்தப்பட்டது. இதில் சிறப்பு விருந்தினராக அமைச்சர் சரோஜா கலந்து கொண்டு கர்ப்பிணிப் பெண்களுக்கு சீர்வரிசை பொருட்களை வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் பேசிய சமூக நலத்துறை அமைச்சர் சரோஜா நடப்பாண்டில் 71 ஆயிரத்து 560 பேர் அரசு சார்பில் நடந்த வளைகாப்பு விழா மூலம் பயன் அடைந்துள்ளதாகவும் தமிழகத்தில் குழந்தைகளை விளையாடச் இத்திட்டம் மிக சிறப்பாக நடந்து வருகிறது என்றும் கூறினார். தமிழகத்தில் மகப்பேறு மற்றும் சிசு மரணங்கள் குறைந்த அளவில் நடந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon