டங்ஸ்டன் மறு ஆய்வுக்கு பரிந்துரை..!
டங்ஸ்டன் சுரங்கம் அமைக்கும் இடத்தை மறு ஆய்வு செய்ய போலீசார் ஆய்வு நிறுவனத்திற்கு மத்திய அரசு பரிந்துரைத்துள்ளது. இந்திய புவிசார் ஆய்வு மையத்திற்கு மத்திய அரசு பரிந்துரைத்துள்ளது.
இது குறித்து மத்திய சுரங்க அமைச்சர் வெளியிட்ட அறிக்கையில் கடந்த பிப்ரவரி மாதம் ஏலத்தில் விடப்பட்ட நாள் முதல் நவம்பர் மாதம் 7 முடிவு அறிவிக்கப்பட்ட நாள் வரை டங்ஸ்டன் சுரங்க ஏலத்திற்கான எதிர்ப்பு குறித்து தமிழ்நாடு அரசு எதுவும் கூறவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுரங்க அமைச்சகத்தின் சார்பாக நடைபெற்ற ஏலம் தொடர்பான ஆலோசனைக் கூட்டங்களில் கலந்து கொண்டும் தமிழ்நாடு அரசு ஏலத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என்றும் பல்லுயிர் பாரம்பரிய தளம் உள்ள இடத்தில் சுரங்கம் அமைய உள்ளதாகவும் கருத்துக்கள் வந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏல முடிவு அறிவிக்கப்பட்ட பிறகு அந்த பகுதியில் சுரங்கம் அமைப்பதற்கு எதிர்ப்பு எழுந்துள்ளதால் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்கும் இடத்தை மறு ஆய்வு செய்ய இந்திய புவிசார் ஆய்வு நிறுவனத்திற்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
விருப்பமான தாரர்களுக்கு ஒப்பந்த கடிதம் வழங்கும் பணியை தற்காலிகமாக நிறுத்தி வைக்க தமிழக அரசுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





