ஆபாச இணையதளங்களை தடை செய்வதற்கு பதில்…- ரஷ்ய அதிபர் புதின்
ஆபாச இணையதளங்களை தடை செய்வதற்கு பதில் அதற்கு மாற்றாக சுவாரசியமான வேறு ஒன்றை கண்டுபிடிக்க வேண்டும் என ரஷ்ய அதிபர் புதின் தெரிவித்துள்ளார்.
ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் செய்தியாளர்களை சந்தித்த அவரிடம் ஆபாச இணையதளங்களை ரஷ்யாவில் தடை செய்ய திட்டம் உள்ளதா என கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்தவர் ஆபாச படங்கள் என்பது உலகம் முழுவதும் இருக்கும் பிரச்சனை.
அசைவம் சாப்பிடுவது போல சகஜமாக மாறி உள்ளது என கவலை தெரிவித்தார். மேலும் ஆபாச இணையதளங்களை தடை செய்வதற்கு மாற்றாக சுவாரஸ்யமான வேறு ஒன்றை கண்டுபிடித்ததே உண்மையான தீர்வாக இருக்கும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





