--- --:--:-- --

அன்பழகனின் 102 வது பிறந்த நாள் விழா..திருப்பூரில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் மலர் தூவி மரியாதை..!

12

திருப்பூர் வடக்கு மாவட்ட தி,மு.க சார்பில் பேராசிரியர் க. அன்பழகனின் 102 வது பிறந்த நாள் விழா..துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

 

திருப்பூர் வடக்கு மாவட்ட தி,மு.க சார்பில் திமுகவின் முன்னோடி தலைவரும், திமுக முன்னாள் அமைச்சருமான  பேராசிரியர் க. அன்பழகனின் 102 வது பிறந்தநாள் விழா திருப்பூர் ரயில் நிலையம் முன்பு பெரியார் மற்றும் அண்ணா சிலை முன்பு நடந்தது. விழாவில் தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு அலங்கரித்து வைக்கப்பட்டு இருந்த க.அன்பழகனின் உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

பின்னர் பெரியார் நானா சிலைகளுக்கும் மாலை அணிவித்து மரியாதையை செலுத்தினார். நிகழ்ச்சியில் தி.மு.க உயர்நிலை செயல் திட்டக்குழு உறுப்பினரும்,  தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதன், தி.மு.க மகளிர் அணி துணை செயலாளரும், மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சருமான கயல்விழி செல்வராஜ், திருப்பூர் வடக்கு மாவட்ட செயலாளரும், திருப்பூர் தெற்கு தொகுதி எம்.எல்.ஏ வுமான க. செல்வராஜ், திருப்பூர் வடக்கு மாநகர செயலாளரும், திருப்பூர் மாநகராட்சி மேயருமான ந. தினேஷ்குமார், திருப்பூர் தெற்கு மாவட்ட செயலாளரும், திருப்பூர் மாநகராட்சி 4 வது மண்டல தலைவருமான இல.பத்மநாபன், திருப்பூர் தெற்கு மாநகர  செயலாளர் டி கே டி நாகராஜன், முன்னாள் எம்.எல்.ஏ கோவிந்தசாமி, மாநகர அவைத்தலைவர் ஈஸ்வரமூர்த்தி, கவுன்சிலர்கள் தினகரன், கோவிந்தசாமி  உள்பட மாவட்ட, மாநகர நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.

தொடர்ந்து  பொதுமக்கள் அனைவருக்கும் அன்னதானமாக பிரியாணி வழங்கப்பட்டது. நிகழ்ச்சியின் முடிவில்  துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் போலீஸ் பாதுகாப்பையும் மீறி பாதுகாப்பு அரணை தாண்டி பொதுமக்கள்நின்று கொண்டிருந்த  இருந்த பகுதிக்கு சென்று அங்கிருந்த 100  க்கும் மேற்பட்டவர்களிடம்  கைகுலுக்கி மகிழ்ச்சியை பகிந்து கொண்டார்.

 

அப்போது பொதுமக்கள் சந்தோசம் அடைந்து துணை முதல்வர் உதயநிதியை வாழ்த்தி கோஷமிட்டனர். பின்னர் அங்கிருந்து திறந்த காரில் மேலே நின்று கொண்டு டவுன்ஹால் வழியாக ஏ.பி.டி சாலி வரை சாலையின்  இருபுறமும் நின்று இருந்த பொதுமக்களை பார்த்து கையசைத்து சென்றார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon