--- --:--:-- --

42 சதவீத வரி கட்டிய உலக சாம்பியன் குகேஷ்..இந்தியாவில் தான் இந்த அவலம்..!

9

உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் பட்டம் வென்ற தமிழ்நாடு வீரர் குகேஷிற்கு ரூ.11.45 கோடி பரிசாக வழங்கப்பட்டது. ஆனால் 42% வரிப்பிடித்தம் காரணமாக குகேஷிற்கு வெறும் ரூ.6.4 கோடி மட்டுமே பரிசுத்தொகை கிடைக்கும் அவலம் ஏற்பட்டுள்ளது.

 

நாட்டில் வரிகள் அதிகளவில் உள்ள நிலையில், வருமான வரி கீழ் ரூ.3.26 கோடியும், கூடுதல் கட்டணமாக ரூ.1.21 கோடியும். சுகாதாரம், கல்வி சிசிஇ வரியாக ரூ.17.96 லட்சம் என மொத்தமாக குகேஷிடம் 4.67 கோடி ரூபாய் வரியாக வசூலிக்கப்பட்டுள்ளது.

 

இதில், மொத்த பரிசுத்தொகையில் 42% ஆகும். என்னங்க சார் உங்க சட்டம்? என மோடி அரசை சமூகவலைதளங்களில் ரசிகர்கள் வறுத்தெடுத்து வருகின்றனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon