--- --:--:-- --

பேனர் விபத்தில் சுபஸ்ரீ உயிரிழந்த விவகாரம்: காவல் ஆய்வாளர் மீது நடவடிக்கை ஏன்?

download

சுபஸ்ரீ உயிரிழந்த விவகாரத்தில் லாரி ஓட்டுநர், அச்சகத்தை தொடர்ந்து பள்ளிக்கரணை காவல் ஆய்வாளரும் நடவடிக்கை எடுக்க பட்டியலில் இணைந்திருக்கிறார். காவல் ஆய்வாளர் மீது ஏன் எதற்காக நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது? சென்னை பள்ளிக்கரணையில் கடந்த 12ஆம் தேதி அதிமுக பிரமுகர் ஜெயகோபால் வைத்த பேனரால் இளம்பெண் சுபஸ்ரீ மீது லாரி மோதியதில் சம்பவ இடத்திலேயே சுபஸ்ரீ உயிரிழக்க இந்த விவகாரம் மாநிலம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

 

சுபஸ்ரீ மீது விழுந்த பேனரை அச்சகத்திற்கு மாநகராட்சி சீல் வைத்தது. அவர் மீது மோதிய லாரி ஓட்டுநர் கைது செய்தது மாநிலம் முழுவதும் சட்டவிரோதமாக வைக்கப்பட்ட பேனர்கள் அகற்றப்பட்டன. ஆனால் அதிமுக பிரமுகர் ஜெயகோபால் மீதும் வழக்கு பதிவு மட்டுமே செய்யப்பட்டது. இந்நிலையில் சுபஸ்ரீ உயிரிழந்த வழக்கை பதிவு செய்துள்ள பள்ளிக்கரணை காவல் ஆய்வாளர் அழகு மீது காவல்துறை இணை ஆணையர் மகேஸ்வரி துறைரீதியான நடவடிக்கை எடுத்துள்ளார்.

 

பள்ளிக்கரணை சாலையில் கடந்த 11ஆம் தேதி சட்டவிரோதமாக பேனர் வைக்கப்பட்டு நிலையில் அதனை அகற்றாமல் அலட்சியமாக இருந்ததாக கூறி காவல் ஆய்வாளர் அழகு மீது 3பி சார்ஜ் போடப்பட்டுள்ளது. 3பி சார்ஜ் நடவடிக்கையின் மூலம் காவல் ஆய்வாளர் அழகின் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு பாதிக்கப்படும். காவல் ஆய்வாளராக மீதான நடவடிக்கைக்கு காரணம் சென்னை உயர்நீதிமன்றத்தின் கண்டனம் என தெரிகிறது.

 

சுபஸ்ரீ உயிரிழந்த விவகாரத்தில் இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. எத்தனை நடவடிக்கை எடுக்கப்பட்டாலும் பேனர் வைத்து ஜெயகோபால் மட்டும் இன்னும் தலைமறைவாகவே உள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon