12ம் வகுப்பு மாணவனை கன்னத்தில் அறைந்த பள்ளி ஆசிரியர்
குஜராத் மாநிலத்தில் பன்னிரண்டாம் வகுப்பு மாணவனை கன்னத்தில் அறைந்த பள்ளி ஆசிரியரை மாணவன் உறவினர்கள் பள்ளி வகுப்பறையில் புகுந்து சரமாரியாக தாக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. குஜராத் மாநிலம் சூரத்தில் இயங்கிவரும் பள்ளி ஒன்றில் 12ம் வகுப்பு மாணவன் ஒருவனை மற்ற மாணவர்கள் முன்னிலையில் ஆசிரியர் ஒருவர் கன்னத்தில் அறைந்துள்ளார்.
அதற்கு அடுத்த நாளே அவரது உறவினர்கள் வகுப்பறையில் புகுந்து பாடம் நடத்திக்கொண்டிருந்த ஆசிரியரை சரமாரியாக தாக்கினர். இந்த இரு தாக்குதல் சம்பவங்களும் அங்கிருந்த வைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி உள்ளன. ஆசிரியர் தாக்கியதில் மாணவர் லேசாக காயமடைந்ததாக கூறப்படும் நிலையில் மாணவணின் உறவினர்களால் தாக்கப்பட்ட ஆசிரியர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பள்ளி நிர்வாகம் மற்றும் மாணவனின் பெற்றோர் ஆகிய இருதரப்பினரும் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
பள்ளிகளில் கூட்டமாக சேர்ந்து விட்ட மாணவர்களை அழைத்து ஆசிரியர்கள் கண்டித்த போது சம்பந்தப்பட்ட மாணவன் அவருடன் வாக்கு வாதத்தில் ஈடுபட்டதாகவும் இதனால் ஆத்திரமடைந்த ஆசிரியர் கண்ணத்தில் அடித்ததாகவும் பள்ளி நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது .இந்த விவரம் தெரிய வந்த உடனேயே அந்த ஆசிரியர் இடை நீக்கம் செய்ய நடவடிக்கை எடுத்ததாகவும் ஆனால் அவரது உறவினர்கள் பள்ளி வளாகத்திற்குள் நுழைந்து ஆசிரியர்களை தாக்கியதாகவும் பள்ளி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




