--- --:--:-- --

நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் – உதித்சூர்யா, தந்தை வெங்கடேசன் கைது

Tamil_News_large_2375998

நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்த புகாரில் மாணவர் உதித் சூர்யா மற்றும் அவரது தந்தை வெங்கடேசன் கைது செய்யப்பட்டுள்ளனர். உதித் சூர்யாவின் தந்தை ஆள்மாறாட்டம் தொடர்பான புகாரை ஒப்புக்கொண்டதாக சிபிசிஐடி போலீசார் தரப்பில் இருந்து தகவல் வெளியாகியிருந்தது. மகனை மருத்துவராக வேண்டும் என்ற ஆசையில் ஆள்மாறாட்டம் செய்து கல்லூரியில் சேர்த்ததாக சூர்யாவின் தந்தை ஒப்புதல் வழங்கியிருந்தார்.

 

நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்ததை ஒப்புக் கொண்டிருந்த நிலையில் உதித் சூர்யா மற்றும் அவரது தந்தை வெங்கடேசன் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த வழக்கு சிபிசிஐடி காவல்துறையினர் தொடர்ந்து காலை முதல் விசாரணை நடத்தி வந்தனர். அவரின் தந்தையிடமும் உதித் சூர்யாவிடம் தனித்தனியாக விசாரணை நடத்தப்பட்டது. மற்றொருபுறம் கல்வியின் முதல்வர் ராஜேந்திரனுடன் துணை முதல்வர் இடமும் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டது.

 

விசாரணையின் முடிவில் உதித் சூர்யாவின் தந்தை வெங்கடேசன் தனது செயலை ஒப்புக் கொண்டதாகவும் சிபிசிஐடி வட்டாரங்கள் தெரிவித்தன. தெரிவித்திருக்கும் நிலையில் தனது மகனை மருத்துவராக வேண்டும் என்பதற்காக இதுபோன்ற பின்விளைவுகளை யோசிக்காமல் இந்த செயலை செய்ததாகவும் அவர் ஒப்புக் கொண்டதாக தெரிகிறது. தற்போது இருவரையும் கைது செய்ததாக சிபிசிஐடி வட்டாரங்கள் உறுதிப்படுத்திய தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

மேலும் இந்த குற்றச்செயல்களில் உறுதுணையாக இருந்த புரோக்கர்கள் குறித்த தகவலும் சிபிசிஐடிக்கு கிடைத்துள்ளதாகவும் அதன் அடிப்படையில் அடுத்தகட்ட நகர்வு இருக்கும் எனவும் சிபிசிஐடி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மேலும் இன்னும் சிறிது நேரத்தில் கைது செய்யப்பட்ட இருவரும் தேனி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த படுவார்கள் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

மேலும் இந்த குற்றச்செயலில் அவருக்கு தாயான கயல்விழிக்கு தொடர்பு இருக்கிறதா என்ற விசாரணையும் நடைபெற்று வருகிறது. விசாரணையில் அவரின் தாய்க்கு நேரடியான தொடர்பு இல்லை என்றும் தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தப்படும் என்றும் சிபிசிஐடி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த குற்றச்சாட்டில் பணம் எந்தவிதத்தில் கைமாறியது ஆன்லைன் மூலம் கைமாறியதா அல்லது வங்கி வடிவம் கைமாறியதா அல்லது நேரடியாக கொடுக்கப்பட்டதா இது போன்ற தகவல்களை சிபிசிஐடி வட்டாரங்கள் தொடர்ந்து விசாரணை செய்து வருகின்றனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon