உணவகத்தில் புகுந்த கார்..!
குஜராத்தில் சாலையோர உணவகத்தில் கார் புகுந்து விபத்திற்குள்ளான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பொடேலி நகரில் அதிவேகமாக சென்ற கார், சாலையோரம் இருந்த உணவகத்திற்குள் புகுந்தது. இந்த விபத்தில் அங்கு சாப்பிட்டுக் கொண்டிருந்த 3 பேர் காயம் அடைந்தனர்.
மேலும், கார் ஓட்டுநர் மயக்கமடைந்த நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில், விபத்து தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




