--- --:--:-- --

ஐயப்ப பக்தர்களுக்கு படி அளந்த ஐயப்பன்..!

3

கேரள மாநிலம் சபரிமலையில் இந்த ஆண்டு மண்டலம் மற்றும் மகர விளக்கு பூஜை காலத்தில் இதுவரை 6 லட்சம் பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டுள்ளதாக தேவசம்போர்டு தெரிவித்துள்ளது. சபரிமலை சன்னதி அருகே திருவிதாங்கூர் தேவசம்போர்டு நவீன வசதியுடன் கூடிய அன்னதானம் மண்டலம் இங்கு உள்ளது.

 

ஒரே நேரத்தில் 2,500 பேர் அமர்ந்து உள்ள வசதி கொண்ட இந்த மண்டபத்தில் மூன்று வேலையும் சுடச்சுட அன்னதானம் வழங்கப்படுகிறது. தினமும் 2,500 பக்தர்கள் அன்னதானத்தில் உணவு உண்பதாக கணக்கிடப்பட்டுள்ளது.

 

அந்த வகையில் இந்த ஆண்டு கோடை காலம் தொடங்கியது முதல் 23 நாட்களில் 5 லட்சத்து 99,781 பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டுள்ளது. அன்னதானம் வழங்கும் திட்டத்தை தேவசம் போர்டு அறிமுகப்படுத்தியுள்ளது.

 

Right Menu Icon