இத மொதல்ல தடை செய்யுங்க: அன்புமணி
பொது இடங்களில் புகைப்பிடிப்பதை தடை செய்யும் சட்டத்தை தீவிரமாக செயல்படுத்த வேண்டும் என அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
சென்னை உள்பட தமிழகத்தின் பெரும்பான்மையான மாவட்டங்களில் நுரையீரல் புற்றுநோய் அதிகரித்து வருவதாக ஆய்வில் தெரியவந்ததை சுட்டிக்காட்டிய அவர், இதற்கு பொது இடங்களில் புகைப்பிடிப்பவர்களை தடுக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்காததுதான் காரணம் என்ற குற்றச்சாட்டையும் முன்வைத்துள்ளார்.





