ஆசிரியர்களை சுற்றுலா அழைத்து செல்வதாக கூறி ஏமாற்றிய நபர்..!
சென்னை எழும்பூரில் உள்ள தனியார் பள்ளியின் ஆசிரியர்களை காஷ்மீர் சுற்றுலா செல்வதாக கூறி பாலாஜி என்பவர் 2023 அக்டோபரில் 19 லட்சம் ரூபாய் பெற்றுக் கொண்டு ஏமாற்றியதாக புகார் எழுந்துள்ளது.
ஆசிரியர்களை இதுவரை சுற்றுலா அழைத்து செல்லாமல் ஏமாற்றியதால் இது தொடர்பாக பள்ளி முதல்வர் எழும்பூர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து பாலாஜியை கைது செய்தனர். பாலாஜியின் மகனும் அந்த பள்ளி மாணவர் என்பது குறிப்பிடத்தக்கது.





