--- --:--:-- --

3 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை..!

3

கேஆர்பி அணையில் இருந்து வெளியேற்றப்படும் நீரின் அளவு அதிகரித்துள்ளதால் மூன்று மாவட்ட மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கர்நாடகா மாநிலத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள கேஆர்பி அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.

 

52 அடியில் தற்பொழுது 50.55 அடிக்கு நீர்மட்டம் உள்ளது. இதனால் அணையின் பாதுகாப்பு கருதி வினாடிக்கு 1644 கன அடி நீர் தென்பெண்ணை ஆற்றில் வெளியேற்றப்பட்டு வருகிறது.

 

இந்த நீரானது தர்மபுரி, திருவண்ணாமலை வழியாக கடலூரில் சென்று கடலில் கலக்கிறது. அதன் காரணமாக கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் தென்பெண்ணை ஆற்றின் கரையோரம் உள்ள மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

 

Right Menu Icon