ஷோரூமில் இருந்த காரை கொள்ளையடித்து சென்ற திருடர்கள்..!
பழனி அருகே ஷோரூம்மில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் மர்ம நபர்களால் திருடப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டம் பழனி திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள மாருதி ஷோரூம் இல் மாருதி கார் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் நேற்று இரவு ஷோரூமுக்குள் முழு கண்ணாடியை உடைத்து கொண்டு புகுந்த மர்ம நபர்கள் சிசிடிவி கேமரா இணைப்புகளை துண்டித்து விட்டு 10 லட்சம் ரூபாய் மதிப்பிலான மாருதி ஷிப்ட் காரை திருடி சென்றனர். மேலும் இது குறித்து சிசிடிவி காட்சிகள் அடங்கிய ஹார்டு டிஸ்குகளை கையோடு எடுத்து சென்றனர்.
தகவலறிந்து வந்த போலீசார் இது குறித்து வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.





