ஜெராக்ஸ் கடையில் பெண்ணை சரமாரியாக தாக்கிய இளைஞருக்கு மாவு கட்டு..!
மதுரையில் ஒத்தக்கடை அருகே ஜெராக்ஸ் கடையில் இளம் பெண்ணை கைகளால் தாக்கியதாக ஞாயிற்றுக்கிழமை இரவு கைது செய்யப்பட்ட சித்திக் ராஜா பாத்ரூமில் வழுக்கி விழுந்ததால் அவரது வலது கையில் எலும்பு முறிவு ஏற்பட்டு மாவு கட்டு போடப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.
அடிதடி, கஞ்சா உள்ளிட்ட வழக்குகளில் சித்திக் ராஜாவிற்கு தொடர்பு இருந்ததால் இளம்பெண் அவரை தவிர்த்ததாக கூறப்படும் நிலையில் கடந்த 17ஆம் தேதி அந்தப் பெண் வேலை செய்யும் ஜெராக்ஸ் கடைக்கு சென்று தாக்கிய சித்திக் ராஜாவுடன் அவரது நண்பரும் கைது செய்யப்பட்டார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





