3 வயது சிறுமிக்கு தொண்டையில் சிக்கிய பிஸ்கட்..!
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியை அடுத்த குருவராஜ கண்டிகையில் தேநீரில் பிஸ்கட் தொட்டு சாப்பிட்ட பொழுது பிஸ்கட் துகள்கள் தொண்டையில் அடைத்து மூச்சு திணறி வெங்கட லக்ஷ்மி என்ற மூன்று வயது சிறுமி உயிரிழந்ததாக கூறப்படும் சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
சிறுமிக்கு சில மாதங்களுக்கு முன்பு தான் இருதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டதாக பெற்றோர் தெரிவித்துள்ளனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





