25 லட்சம் பேருக்கு அன்னதானம்..தேவசம் போர்டு எடுத்த முடிவு..!
சபரிமலை சீசனில் இந்த ஆண்டு 25 லட்சம் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்க தேவசம்போர்டு இலக்கு நிர்ணயித்துள்ளது சபரிமலை சன்னதி அருகே உள்ள கூடத்தில் ஒரே நேரத்தில் 2500 பேர் உண்ணும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
தினசரி 2,500 பேருக்கு அன்னதானம் செய்யப்பட்டு வருகிறது. காலை 6.30 மணி முதல் 11 மணி வரை காலை உணவாக உப்புமா, சாம்பார், சுக்கு, தண்ணீர் வழங்கப்படுகிறது. 3.30 மணி வரை அளவிலா சாப்பாடு, சாலட் வழங்கப்படுகிறது.
மாலை 6:30 மணிக்கு தொடங்கி நாளை அடைக்கப்பட்ட பின்னரும் வரும் கடைசி பக்தர் வரை இரவு உணவாக கஞ்சி பட்டாணி மற்றும் இதர ஏதாவது ஒரு பயிர்வகை கூட்டும் வழங்கப்படுகிறது. சமையல் மற்றும் பரிமாறுவதற்காக 240 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
உணவின் தரத்தை அவ்வப்போது அதிகாரிகள் ஆய்வு செய்யும் நிலையில் உணவு கூடம், கிருமி நாசினி மூலம் தினசரி மூன்று முறை தூய்மைப்படுத்தப்படுகிறது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





