சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு ஈட் ரைட் கேம்பஸ் சான்றிதழ்..!
சென்னை ராஜீவ் காந்தி பொது மருத்துவமனைக்கு உணவு பாதுகாப்பு துறை சார்பில் ஈட் ரைட் கேம்பஸ் என்ற சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. இங்கு 300க்கும் மேற்பட்ட உள்நோயாளிகளுக்கு 10 வகையான உணவுகள் வழங்கப்படுகின்றன.
இதை ஆய்வு செய்த சென்னை மாவட்ட உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் சான்றிதழை வழங்கினார். தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் இந்த சான்றிதழ் பெற்ற முதல் மருத்துவமனை என்ற பெருமையை ராஜீவ் காந்தி மருத்துவமனை பெற்றுள்ளது.
நாடு முழுவதும் உள்ள மருத்துவமனைகளின் கல்லூரிகளில் ஆரோக்கியமான உணவு வழங்கப்படுவதே ஊக்கப்படுத்துவதற்காக உணவு பாதுகாப்பு ஆரோக்கியம் உள்ளிட்ட வரையறைகளில் இந்த சான்றிதழ் வழங்கப்பட்டு வருகிறது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





