--- --:--:-- --

ஃபெங்கல் புயல் எச்சரிக்கை: பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிப்பு!

1

ஃபெங்கல் புயல் எச்சரிக்கை மற்றும் கனமழை காரணமாக நாளை புதன்கிழமை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.வங்கக் கடலில் உருவான காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி இன்று காலை ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

 

இது சென்னையில் இருந்து 800 கிலோமீட்டர் தொலைவிலும், நாகப்பட்டினத்தில் இருந்து 590 கிலோ மீட்டர் தொலைவிலும் நிலைகொண்டுள்ளது. மேலும், மணிக்கு 12 கிலோமீட்டர் வடமேற்கு திசையில் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் நகர்ந்து வருகிறது.

 

இது நாளை புயலாக வலுப்பெறும் என்றும், அதற்கு அடுத்த இரண்டு நாட்களில் தமிழ்நாடு மற்றும் இலங்கை கடற்கரையை நோக்கி நகரும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. வங்கக்கடலில் புயல் உருவானால், அதற்கு ‘ஃபெங்கல்’ என பெயரிடப்பட உள்ளது.

 

இதன் காரணமாக தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.

 

அதிலும், கடலூர், மயிலாடுதுறை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் அதி கனமழையும், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், அரியலூர், திருவாரூர், நாகப்பட்டினம், தஞ்சாவூர், புதுக்கோட்டை மாவட்டங்கள் மற்றும் புதுவையில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

 

இந்நிலையில், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் அதி கனமழை மற்றும் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து, இரண்டு மாவட்டங்களிலும் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை ஒருநாள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னெச்சரிக்கை காரணமாக விடுமுறை அளிக்கப்படுவதாக புதுச்சேரி கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்துள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon