--- --:--:-- --

இந்திய அரசியலமைப்பு சட்ட தினம் – அம்மாபாளையம் நகராட்சி நடுநிலைப் பள்ளியில் தேசிய கொடி ஏற்றி மரியாதை

11

1949 நவம்பர் 26 இந்திய அரசியலமைப்புச் சட்டம், அரசியல்
நிர்ணயசபையால் கையெழுத்திடப்பட்டது. அன்றைய தினம் 395 பிரிவுகளில் 15 பிரிவுகள் மட்டுமே அமலுக்கு வந்தன.

 

1950 ஜனவரி 26 அன்றுதான் அனைத்து பிரிவுகளும் அமலாகி, இந்தியா முழுமையான குடியரசாக மாறியது. இதனையடுத்து நவம்பர் 26 ம் தேதியை இந்திய அரசியலமைப்புச் சட்ட தினமாகக் கொண்டாடி வருகிறோம்.

 

இதனை தொடர்ந்து திருமுருகன்பூண்டி நகராட்சி அம்மாபாளையம் நகராட்சி நடுநிலைப் பள்ளியில் இந்திய அரசியலமைப்பு சட்ட தினம் பள்ளி வளாகத்தில் நடந்தது. இதனையொட்டி பள்ளியில் தேசிய கொடி ஏற்றப்பட்டு மரியாதை செய்யப்பட்டது. பின்னர் 6 முதல் 8 ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவ மாணவிகள் பள்ளி தலையையாசிரியர் ராமகிருஷ்ணன் தலைமையில் உறுதிமொழி ஏற்றனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon