--- --:--:-- --

ராஜஸ்தானில் கபடி போட்டி..தாக்கப்பட்ட தமிழக மாணவர்கள்..!

5

ராஜஸ்தானில் கபடி விளையாட்டு போட்டியின் பொழுது தமிழ்நாட்டு மாணவர்கள் தாக்கப்பட்ட சம்பவம் நடந்தவுடன் தொடர்புடைய பல்கலைக்கழகத்துடன் மாணவர்களின் பாதுகாப்பு குறித்து விசாரித்து பாதுகாப்பை உறுதி செய்ததாக தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் தெரிவித்துள்ளது.

 

மேலும் பல்கலைக்கழகத்துடன் தொடர்ந்து தொடர்பில் உள்ளதாகவும் மாணவர்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

 

ராஜஸ்தானில் கபடி போட்டியின் பொழுது தமிழக அணி வீரர்கள் தாக்கப்பட்ட வீடியோ பரவி வருவதாகவும் பாதுகாப்பு உறுதி செய்த நிலையில் தொடர்ந்து நடைபெற்ற போட்டியில் மாணவர்கள் சுமூகமாக பங்கேற்றதாகவும் தமிழ்நாட்டிற்கு திரும்ப உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Right Menu Icon