திருப்பதி லட்டு விவகாரம்..ஆந்திர போலீசார் விசாரணை..!
திருப்பதி லட்டு விவகாரம் திண்டுக்கல்லில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஆந்திர போலீசார் விசாரணை மேற்கொண்டனர். திருப்பதியில் எட்டு தயாரித்து வழங்கப்பட்ட நிலையில் விலங்கு கொழுப்பு இருப்பதாக குஜராத்தை சேர்ந்த ஆய்வு நிறுவனம் ஆய்வு முடிவு ஒன்றை வெளியிட்டது. இது பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.
இதனிடையே திருப்பதி தேவஸ்தானத்திற்கு திண்டுக்கல்லை சேர்ந்த நிறுவனம் நெய் அனுப்பியது தெரிய வந்தது. இந்த நிறுவனத்தில் ஏற்கனவே கடந்த செப்டம்பர் மாதம் ஆய்வின் இடத்தில் மாதிரிகள் எடுத்து செல்லப்பட்டு இருந்தது.
இந்த நடிகர் இந்த நிறுவனத்தில் ஆந்திர காவல்துறையினர் மூன்று கார்களில் வந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். திருப்பதி தேவஸ்தானத்திற்கு அனுப்பப்பட்ட நெய்யின் விவரங்கள் நெயில் கலந்துள்ள பொருட்கள் குறித்து அவர்கள் விசாரணை நடத்தி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.






