ஊரடங்கு அமல் – அமித்ஷா அவசர ஆலோசனை!
மீண்டும் மணிப்பூர் பற்றி எரியும் நிலையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அவசர ஆலோசனை மேற்கொண்டார். மணிப்பூர் வன்முறையில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 20-ஐ எட்டியுள்ளது. இடஒதுக்கீடு பிரச்னையால் பற்றி எரிந்த மணிப்பூரில் வன்முறைச் சம்பவங்கள் அவ்வப்போது நிகழ்ந்து வந்த நிலையில், தற்போது மீண்டும் அதிகரித்துள்ளன.
ஜிரிபாம் மாவட்டத்தில் பழங்குடியினப் பெண் அண்மையில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு வன்முறையாளர்களால் எரித்துக் கொலை செய்யப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதனால், வீடுகள், கடைகளுக்கு தீ வைத்து வன்முறையில் ஈடுபட்ட குக்கி சமூகத்தினர், சிஆர்பிஎஃப் படையினரின் முகாம் மீதும் தாக்குதல் நடத்தினர்.இதைத் தொடர்ந்து, மெய்தி இன மக்கள் தங்கியிருந்த முகாம்களில் இருந்து 3 குழந்தைகள் மற்றும் 3 பெண்கள் மாயமான நிலையில், அவர்கள் அனைவரும் சடலமாக மீட்கப்பட்டனர். இதையடுத்து, மெய்தி சமூகத்தினர் நடத்திய போராட்டத்திலும் வன்முறை வெடித்தது.
இந்நிலையில், ஜிரிபாமில் குக்கி சமூகத்தைச் சேர்ந்த 27 வயதுடைய ஆணின் சடலம் கண்டெடுக்கப்பட்டது. இப்படி நாளுக்கு நாள் இரு சமூகங்களிலும் மாறி மாறி சடலங்கள் மீட்கப்படும் நிலையில், கடந்த ஒரு வாரத்தில் மட்டும் வன்முறையால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 20-ஐ எட்டியுள்ளது.
மணிப்பூரில் நிலைமை மோசமடைவதால், ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. மேலும், தலைநகர் இம்பால் உள்ளிட்ட 5 மாவட்டங்களில் இணைய சேவைகள் முடக்கப்பட்டுள்ளன.
மணிப்பூரில் கடந்த சில மாதங்களாக தணிந்திருந்த வன்முறை, தற்போது மீண்டும் அதிகரித்துள்ளது. அண்மையில், பழங்குடியின இளம்பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு எரித்துக் கொல்லப்பட்டார். இந்தக் கொடூர செயலைத் தொடர்ந்து மணிப்பூரில் வன்முறை வெடித்தது.
பயங்கரவாதிகளை ஒழிக்கக்கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். முதலமைச்சர், உட்பட 13 எம்.எல்.ஏ.க்களின் வீடுகளுக்கு போராட்டக்காரர்கள் தீ வைத்தனர். இதையடுத்து, மணிப்பூரில் கூடுதல் படைகள் குவிக்கப்பட்டுள்ளன. ஜிரிபாம் மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினருக்கு கூடுதல் அதிகாரம் வழங்கும் சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது.
மணிப்பூர் வன்முறை தொடர்பாக மூத்த அதிகாரிகளுடன் உள்துறை மந்திரி அமித்ஷா அவசர ஆலோசனை நடத்தினார். மணிப்பூரில் வன்முறை சம்பவங்கள் மீண்டும் அதிகரித்து வரும் நிலையில் மூத்த அதிகாரிகளுடன் உள்துறை அமைச்சர் அமித்ஷா அவசர ஆலோசனை நடத்தினார்.
மகாராஷ்டிராவில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டிருந்த அமித்ஷா, அதனை ரத்து செய்துவிட்டு டெல்லி திரும்பினார். பாதுகாப்புத் துறையின் மூத்த அதிகாரிகளுடன் அமித்ஷா அவசர ஆலோசனை மேற்கொண்டார்.
மணிப்பூரில் நிலவி வரும் பதற்றத்தைக் குறைக்கவும், பயங்கரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தவும் அதிகாரிகளுடன் அமித்ஷா ஆலோசனை நடத்தினார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




