போலீஸிடம் இருந்து தப்பித்து ஓடிய ரவுடி..காட்டுக்குள் தடுக்கி விழுந்து காலில் எலும்பு முறிவு..!
சென்னை தாம்பரம் அருகே பல்வேறு வழக்குகள் தொடர்பாக கடந்த மூன்று மாதங்களாக தேடப்பட்ட ரவுடி இளைஞனின் என்பவர் தப்பிக்க காட்டு பகுதிக்குள் ஓடிய பொழுது மரத்தின் வேர் தடுக்கி கீழே விழுந்ததில் காலில் முறிவு ஏற்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.
ரவுடி லெனின் மீது கொலை கொள்ளை முயற்சி அடிதடி என 20-க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ள நிலையில் காவல்துறைக்கு சவால் விடுத்தும் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையிலும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரீல்ஸ் பதிவிட்டு வந்த நிலையில் கைது செய்யப்பட்டவரிடம் இருந்து கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.





