பள்ளிக்குள் எரிந்த நிலையில் உள் நுழைந்த நபர்..!
சென்னை அசோக் நகரில் உள்ள அரசு பள்ளி வளாகத்தில் நள்ளிரவில் கொழுந்து விட்டு எரிந்த படி நுழைந்து உயிரிழந்த நபரால் பரபரப்பு ஏற்பட்டது. சென்னை அசோக் நகரின் அரசினர் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் மாணவர் விடுதியில் உள்ளது.
இங்கு இரவு 11 மணி அளவில் பயங்கரமான கூச்சல் சத்தம் கேட்டுள்ளது. விடுதியில் உறங்கிக் கொண்டிருந்த மாணவர்கள் மற்றும் காப்பாளர்கள் வெளியே பார்த்தபொழுது 40 வயது மதிக்கத்தக்க நபர் கொழுந்து விட்டு எறிந்து நிலையில் விடுதியை நோக்கி வந்துள்ளார்.
தகவலறிந்து சென்ற போலீசார் உடலை கைப்பற்றி ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். யார் என்று தெரியாத நிலையில் அவர் யார் பூட்டப்பட்டிருந்த பள்ளி வளாகத்திற்குள் எப்படி வந்தார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





