--- --:--:-- --

இன்ஸ்டால் காதலனை நம்பி வீட்டை விட்டு ஓடிய 13 வயது சிறுமி..!

7

13 வயது சிறுமியை அழைத்துச் சென்ற இளைஞரை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். புதுக்கோட்டை மாவட்டம் பரமக்குடி பகுதியை சேர்ந்த 13 வயது சிறுமியை காணவில்லை என்று அவரது பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

 

வழக்கு பதிவு செய்து பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வந்தனர். அந்த சிறுமிக்கும் தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டையை சேர்ந்த 18 வயது இளைஞர் நிதிஷுக்கு இன்ஸ்டா மூலம் பழக்கம் ஏற்பட்டதும் அவர்கள் திடீரென வீட்டை விட்டு வெளியேற முடிவு செய்து கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு திருப்பூருக்கு சென்றதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

 

அவர்கள் தங்கி இருந்த இருப்பிடத்தை கண்டறிந்த போலீசார் இளைஞரிடம் இருந்து சிறுமியை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர். பின்னர் இளைஞரை கைது செய்து போக்சோ சட்டத்தில் சிறையில் அடைத்தனர்.

 

Right Menu Icon