அல்சாரி ஜோசப் விளையாட தடை..!
வெஸ்ட் இண்டீஸ் வீரர் அல்சாரி ஜோசப் இரண்டு போட்டிகளில் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்து வெஸ்ட் இண்டீஸ் அணிக்குள் மோதிய மூன்றாவது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டி நடைபெற்றது.
இந்த போட்டியில் முதலாவது இன்னிங்சின் நான்காவது ஓவரின் பொழுது கேப்டனுக்கும், அல்சாரி ஜோசப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் ஓவர் முடிந்ததும் அல்சாரி ஜோசப் மைதானத்தை விட்டு வெளியேறினார்.
இந்த நிலையில் வாக்குவாதம் செய்துவிட்டு காரணம் சொல்லாமல் வெளியேறிய ஜோசப்புக்கு இரண்டு போட்டிகளில் விளையாட வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வாரியம் தடை விதித்துள்ளது.





