--- --:--:-- --

சர்வதேச சைகை மொழி தினத்தை முன்னிட்டு கோவையில் கல்லூரி மாணவர்களுக்கு சைகை மொழி குறித்த பயிற்சி !!!

23

சர்வதேச சைகை மொழி தினத்தை முன்னிட்டு கோவையில் கல்லூரி மாணவ,மாணவிகளுக்கு சைகை மொழி குறித்த பயிற்சி அளிக்கப்பட்டது.காது கேளாத வாய் பேச இயலாதவர்களுக்கென சர்வதேச சைகை மொழி தினம் இன்று உலகம் முழுவதும் அனுசரிக்கப்படுகிறது.

இந்நிலையில் இந்த தினத்தை முன்னிட்டு கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் உள்ள பிஷப் அப்பாசாமி கலை அறிவியல் கல்லூரியில் சைகை மொழி குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.கல்லூரி முதல்வர் ஜெமிமா வின்ஸ்டன் தலைமையில் நடைபெற்ற இதில் மாணவ மாணவிகளுக்கு சைகை மொழி குறித்த பயிற்சி அளிக்கப்பட்டது.

சைகை மொழி குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக நடைபெற்ற இதில் காது கேளாத மற்றும் வாய்பேச முடியாதவரான பேராசிரியர் லிபின் சைகை மொழியில் மாணவ,மாணவிகளுக்கு பயிற்சி அளித்தார்.பின்னர், சைகை மொழியில் செய்தியாளர்களிடம் பேசினார்.

அப்போது,அவர் காது மற்றும் வாய்பேச முடியாதோர் நம்மில் சரி விகித அளவில் பயணிப்பதாகவும் அவர்களுக்கு நம்பிக்கை தரும் வகையில் இந்த சைகை மொழி குறித்த விழிப்புணர்வை அனைவரும் அறியும் வகையில் இந்த நிகழ்ச்சியை நடத்துவதாக அவர் தெரிவித்தார்.இந்நிகழ்ச்சியில் கல்லூரி மாணவ,மாணவிகளுக்கு சைகை மொழி பயிற்சி அளிக்கப்பட்டது.இந்நிகழ்ச்சியில் சைகை மொழி ஆசிரியர் முத்து ரத்தினம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Right Menu Icon