உ.பி முதல்வருக்கு மிரட்டல் விடுத்த பெண் கைது..!
உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கு மிரட்டல் செய்தி அனுப்பிய பெண்ணை மகாராஷ்டிரா தீவிரவாத தடுப்பு பிரிவு போலீசார் கைது செய்தனர். தானேவில் உல்லாஸ் நகரைச் சேர்ந்த பாத்திமா கான் மிரட்டல் விடுத்தது கண்டுபிடிக்கப்பட்டது.
ஆனால், அவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்று போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும் விசாரணை மற்றும் உடல் சோதனைக்காக அவர் மும்பைக்கு மாற்றப்பட்டுள்ளார்.






