கடலோர காவல் படையின் விமானப்படைக்கு தேர்வானவர்களுக்கு பட்டங்களை வழங்கினார் ராஜ்நாத் சிங்
சென்னை பரங்கிமலையில் உள்ள இந்திய கடலோர காவல் படையின் விமானப்படையின் பயிற்சி பெற்றவர்களுக்கு பட்டம் வழங்கும் விழா நடைபெற்று வருகிறது. இதில் மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பங்கேற்று பட்டங்களை வழங்குகிறார். சென்னை பரங்கிமலையில் உள்ள ராணுவ அதிகாரிகள் பயிற்சி மையத்தில் இருக்கக்கூடிய கடலோர காவல் படையின் விமானத் தளத்தில் இந்திய கடலோர காவல் படையில் சிறப்பாக பணியாற்றிய 61 அதிகாரிகள் மற்றும் வீரர்களுக்கு சான்றிதழ்கள், பதக்கம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.

இந்த பதக்கம் மற்றும் பட்டங்களை மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அவர்கள் வழங்கி வருகிறார்கள். குறிப்பாக 61 அதிகாரிகள் இந்த பட்டங்களை பெறுகிறார்கள் அதாவது இயற்கை தேர்தலின்போது மீட்பு பணிகள் மற்றும் கடலோர பகுதிகளில் ஊடுருவல்கள் மற்றும் கடற் கொள்ளையர்களிடமிருந்து சிறப்பாக பணியாற்றியவர்களுக்கு அந்த அதிகாரிகளுக்கான பட்டம் வழங்கும் நிகழ்ச்சியானது நடைபெற்று வருகிறது. இந்த 61 அதிகாரிகளே தமிழகத்தைச் சேர்ந்த அதிகாரிகளும் இடம்பெற்றுள்ளனர்.

குறிப்பாக பரமேஷ் சிவமணி என்பவரும் இந்த பட்டம் வழங்கும் நிகழ்ச்சியில் பட்டம் பெறுகிறார். அதாவது கஜா புயல், வர்தா புயல், மற்றும் எண்ணெய் கசிவு போன்ற நிகழ்வுகளில் சிறப்பாக பணியாற்றியதற்காக பட்டத்தை ஐஜி பரமேஷ் சிவமணி அவர்கள் பெறுகிறார்கள். அதேபோல் இந்தியா முழுவதும் இருக்கக்கூடிய இந்திய கடலோர காவல் படையில் சிறப்பாக பணியாற்றிய 61 அதிகாரிகள் மற்றும் வீரர்களுக்கு சென்னை பரங்கிமலையில் இருக்கக்கூடிய ராணுவ அதிகாரிகள் பயிற்சி மையத்தில் பட்டம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.





