பட்டாசை இருசக்கர வாகனத்தில் வைத்து சென்ற போது நடந்த விபரீதம்..!
உளுந்தூர்பேட்டை அருகே இருசக்கர வாகனத்தில் எடுத்துச் சென்ற பட்டாசு வெடித்ததில் ஒருவர் உயிரிழந்தார். இரண்டு பேர் படுகாயம் அடைந்தனர். எறையூர் கிராமத்தை சேர்ந்தவர் பட்டாசுகளை வாங்கிக்கொண்டு நண்பர்கள் இரண்டு பேருடன் இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார்.
அப்பொழுது ராக்கெட் வெடி ஒன்று இருசக்கர வாகனத்தின் மீது வந்து விழுந்ததில் இவர்கள் எடுத்துச் சென்ற பட்டாசு வெடித்து சிதறியுள்ளது, இதில் வாகனத்தில் சென்ற மூன்று பேரும் படுகாயம் அடைந்தனர்.
அக்கம் பக்கத்தினர் மீட்டு அரசு மருத்துவமனையில் அனுமதித்த நிலையில் வில்சன் உயிரிழந்தார். இரண்டு பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றோம்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





