கல்லூரி கௌரவ பேராசிரியர்கள் திடீர் போராட்டம்..!
அண்ணாமலை பல்கலைக்கழக பேராசிரியர்களை அரசு கலைக்கல்லூரியில் நிரந்தரம் செய்வதை கண்டித்து அரசு கல்லூரி கௌரவ பேராசிரியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அரியலூர் அரசு கலைக்கல்லூரியின் முன் தமிழ்நாடு கல்லூரி ஆசிரியர் கழகம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அரியலூர் அரசு கலைக்கல்லூரி பேராசிரியர்களின் பணி நிரந்தரத்தை பாதிக்கும் வகையில் அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் பணி புரியும் உயர் ஆசிரியர்களை அரசு கல்லூரியில் பணி நிரந்தரம் செய்வதை கைவிட வேண்டும் என்றும் அரசு கல்லூரியில் பணிபுரியும் கௌரவ பேராசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் எனவும் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. இந்த ஆர்ப்பாட்டத்தில் அரியலூர் அரசு கலைக் கல்லூரி பேராசிரியர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





