ஆடு குறுக்கே வந்ததால் நேர்ந்த பரிதாபம்..தந்தை, மகள் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு..!
தஞ்சை அருகே தேசிய நெடுஞ்சாலையில் ஆடு குறுக்கே வந்ததால் கட்டுப்பாட்டை இழந்த கார் கவிழ்ந்த விபத்தில் தந்தையும் மகளும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
திருச்சியை சேர்ந்த விக்னேஸ்வரன் என்பவர் மனைவி காயத்ரி மகள் யாழினி ஆகிய மூவரும் தஞ்சாவூருக்கு காரில் வந்துவிட்டு மீண்டும் திருச்சிக்கு சென்று வந்தனர். புதுக்குடி அருகே தேசிய நெடுஞ்சாலைகளில் சென்று கொண்டிருந்த பொழுது சாலையில் குறுக்கே திடீரென்று ஆடு வந்துள்ளது.
ஆற்றின் மீது கார் மோதாமல் இருக்க விக்னேஸ்வரன் காரை நிறுத்தியுள்ளார். இதில் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையில் கவிழ்ந்து விபத்திற்கு உள்ளானது.
விக்னேஸ்வரன், யாழினி இருவரும் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இந்த நிலையில் சிகிச்சைக்கு செல்லும் வழியிலேயே இருவரும் உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





