மது போதையில் தகராறு..கோடாரியால் வெட்டிக் கொன்ற தந்தை..!
மதுராந்தகத்தில் தந்தை மகனுக்கு இடையே ஏற்பட்ட தகராறில் தந்தையே மகனை வெட்டி கொலை செய்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அடுத்துள்ள அருணா குளம் பகுதியைச் சேர்ந்தவர் பார்த்திபன்.
இவருக்கும் தந்தை கோபாலுக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்பொழுது மதுபோதையில் இருந்த பார்த்திபன் தந்தை கோபாலை அடித்ததாக தெரிகிறது. இதனால் ஆத்திரத்தில் இருந்த கோபால் பார்த்திபனை வெட்டியுள்ளார்.
இதில் பலத்த காயமடைந்த பார்த்திபன் உடல் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.






